தெரியாததை தெரிந்து கொள்ளுவதில் நேரத்தை செலவழிக்க கற்று கொள்ள நாம் அனைவரும் முயற்சி செய்வோம் . !!! நேரத்தை வீண் செய்யாமல் இருப்போம் !!
அன்பைத் தேடி
அழகாய் படி
அறிவைத் தேடி
ஆழமாய் படி
இன்மாய் வாழ
இளமையில் படி
இருக்கின்ற வரை
இயன்றவரை படி
இல்லாதோருக்கு
உதவிட படி
ஈன்றவர்களின் பெருமை
காத்திட படி
இதிகாசங்களை முற்றிலும்
ஒழித்திட படி
தெரியாதோருக்கு
தெளிவுபடுத்திட படி
இயலாமையிலும்
கொடுத்து உதவிட படி
ஒற்றுமையாய் வாழ
அமைதியைப் படி
உழைப்பைச் சுரண்டும்
ஆதிக்கத்தைப் ப
உண்மையான, வேதமா
உணர்ந்து படி
கண்ணுக்குத் தெரிந்த
உண்மைகளைப் படி
காட்டில் வாழும்
உயிர்களைப் படி
மொழியைக் காக்க
தெளிவாய்ப் படி
மண்ணைக் காக்க
மாண்புடன் படி
இனத்தைக் காக்க
வீரத்தைப் படி
மனிதனாய் வாழ
உலகைப் படி !!!
இந்த வரிகள் நமக்கு உணர்த்துவது எல்லாம் ஒன்றே ஒன்று தான் மனிதனாய் வாழ உலகை படிக்க வேண்டும் பிறர் சொல்லுவதை கேட்க வேண்டும் . அதை நாம் அப்படியே நம்புவது தான் தவறு . அதை நாம் ஆரைய வேண்டும்
அப்படி நாம் ஆரைய ஆரபித்து விட்டால் நாம் அறிய வேண்டிய விசையங்களுக்கு எல்லையே இருக்காது . புத்தி சாலி ஆராய்வான் . நாம் அனைவரும் புத்திசாலிகளாகவே இருப்போம் .
No comments:
Post a Comment