Thursday, 3 April 2014

ஒரே தடவையில் மேலும் 30 சகோதரர்கள் புனித இஸ்லாத்தைத் தழுவினர்


ஒரே தடவையில் மேலும் 30 சகோதரர்கள் புனித இஸ்லாத்தைத் தழுவினர்

சஊதி அரேபியா யன்பு பிரதேசத்தில் பணிபுரிகின்ற 37 கிருஸ்த்தவ சகோதரர்கள் கடந்த இரு வாரங்களின் புனித இஸ்லாத்தைத் தழுவியதைத் தொடர்ந்து கடந்த (03.01.2013) வியாழக்கிழமை மேலும் 30 கிருஸ்த்தவ சகோதரர்கள் நான்கு பொறியியளாளர்கள் உள்ளடங்களாக ஓரே நேரத்தில் புனித இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வு இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

யன்பு தஃவா நிலையத்தில் பல மொழிகளுக்கான தஃவா இணைப்பாளராக செயல்படும் காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின் உப தலைவர் சகோ. ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் அயராத முயற்சியினால் அவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இச்சகோதரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. இஸ்லாத்தைத் தழுவிய அனைத்து சகோதரர்களும் நேற்றைய தினம் (04.01.2013) தங்களது முதலாவது ஜும்ஆ தொழுகைக்காக யன்புவில் அமைந்துள்ள பின் பாஸ் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு வருகை தந்து தொழுகையில் கலந்து கொண்டதுடன் கலிமா ஸஹாதாவை மொழிந்ததைத் தொடர்ந்து அங்கு தொழுகைக்காக வருகை தந்திருந்த அறபு மக்களால் கௌரவிக்கப்பட்டனர்.

இது தொடர்பான செய்திகள் சஊதி இணையத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன.

தகவல்
இஸ்லாமிக் சென்றர்

காத்தான்குடி.   

No comments: