பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு அவர்கள் அணியும் ஆடையே காரணம் என பிரேசிலில் நடத்தப்பட்ட சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த வருடம் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் நான்காயிரம் பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 65 சதவீதத்தினர், பெண்கள் தங்களது உடல் வெளியே தெரியும் படி ஆடை அணிவதே வன்புணர்வு மற்றும் பாலியல் தொல்லைகளுக்கு காரணம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், பெண்கள் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்திருந்தாலே வன்புணர்வு சம்பவங்கள் பெருமளவு குறைந்து விடும் என 59 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இக்கருத்து கணிப்பு பிரேசில் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் அணியும் உடை குறித்த பொதுமக்களின் கருத்தாகவே இது பார்க்கப்படுகிறது.
மேலும், பெண்கள் அணியும் ஆடை குறித்த விழிப்புணர்வும் பிரேசில் நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் தில்மா...
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ள அரசாங்கத்துடன் சமூகமும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த கருத்துக் கணிப்பு அரசினால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதது *********************************
#தெளிவு
இதை தான் 1400 ஆண்டுகளுக்கும் முன்பே இஸ்லாம் கூறியுள்ளது.
இஸ்லாம் கூறும்போது பெண்ணடிமை தனம் என்று வியாக்கியானம் பேசிய மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் இன்று இஸ்லாத்தின் கொள்கையே
சரியானது என்று முடிவுக்கு வந்துள்ளனர்.
இஸ்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம் அல்ல...
மாறாக படைத்தவனால் உருவாக்கப்பட்ட மார்க்கம் என்பதால் தான் 1400 ஆண்டுகளாக நிலை மாறாத ஒரே மார்க்கமாக இஸ்லாம் தனித்து இருந்து வருகிறது.
No comments:
Post a Comment