பிரிட்டனின் மத ஒப்பீட்டு ஆய்வாளர் புனித இஸ்லாத்தை ஏற்றார்
பிரித்தானியாவின் பிரபல மத ஒப்பீட்டு ஆய்வாளரான அன்னா கென்னடி புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பலஸ்தீனுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டுள்ள அவர் பலஸ்தீன் முஸ்லிம் புலமையாளர்கள் சங்கத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக கூறியுள்ளார்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இவர் தனது இந்த அறிவிப்பை ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்தார். 39 வயதுடைய அன்னா கென்னடி, லண்டன் பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டுத் துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்து வருகின்ற அதேவேளை விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
பலஸ்தீன் முஸ்லிம் புலமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெய்ஹ் சாலிம் சலாமா அன்னா கென்னடிக்கு அல்குர்ஆன் பிரதியையும் இதன்போது அள்பளிப்புச் செய்துள்ளார்.
No comments:
Post a Comment