Thursday 3 April 2014

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் அமெரிக்க பேராசிரியர் சிலவரிகள்


இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் அமெரிக்க பேராசிரியர் சிலவரிகள் 
===================================
இறைவா! நீ என்னை அச்சுறுத்தி விட்டாய்...
[ குர்ஆன், மற்ற எந்த ஒரு ஆவணங்களையும் விட முற்றிலும் வேறுபட்டது
 (It is a very fascinating document. It is unlike any other document). எந்தவொரு மத புத்தகங்களையும் விட குர்ஆன் எனக்கு சிறந்ததாக தெரிந்தது. ஏன்?, அது என்னுள் ஆழமாக ஊடுருவியது. அது ஒரு அற்புத உணர்வு. ஊடுருவியது மட்டுமல்லாமல் என்னிடத்தில் ஒரு நிறைவான தாக்கத்தை அது ஏற்படுத்தியது. என்னை அதனுடன் மிகவும் ஒன்ற வைத்தது. என்னை மிகவும் பாதித்த குர்ஆனுடைய வசனங்களென்றால், "நீங்கள் உண்மையாளராக இருந்தால் இது போன்ற ஒன்றை கொண்டு வாருங்கள்" என்று மனித குலத்திற்கு அது விடும் சவால்கள் தான். இவை எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன. ஏனென்றால் இது போன்ற சவால்களை வேறு எந்தவொரு புத்தகத்திலும் நான் கண்டதில்லை.

சரி, குர்ஆன் ஏன் இப்படியொரு சவாலை விட வேண்டும்?, குர்ஆனைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சிகளை மேலும் அதிகப்படுத்தின அந்த வசனங்கள். என் கேள்விகள் தெளிவுபெற ஆரம்பித்தன. முடிவாக குர்ஆனைப் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்றுணர்ந்தேன். இந்த புத்தகம் ஒரு அதிசயம், இது இறைவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். என் முஸ்லிம் நண்பர் அன்று பேசியது மரணத்தைப் பற்றி. "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும்" என்ற குர்ஆன் வசனம் தான் அன்றைய உரையாடலின் தலைப்பு. அந்த தலைப்பை அவர் விளக்கிய விதம் இருக்கின்றதே......

என்னால் அது எப்படியிருந்தது என்று இப்போது திரும்ப கூட சொல்ல முடியாது. மிக அற்புதமான விளக்கம் அது. அவ்வளவுதான், வீட்டிற்கு விரைந்தேன். என் அறைக்குள் நுழைந்து தாளிட்டேன். "இறைவா, நீ என்னை அச்சுறுத்தி விட்டாய் அஹ் (You scared the beep out of me, ah)" அந்த கணம், என்னுள் இருந்த குழப்பம் ஒன்றுமில்லாமல் ஆனது. நான் எனக்குள் விளையாடிக்கொண்டிருந்த ஆட்டமெல்லாம் உளுத்து போயின.]

No comments: