Saturday 26 April 2014

உலகிலேயே அதிகமாக 21 மணிநேரம் நோன்பு நோற்கும் டென்மார்க் முஸ்லிம்கள்


டென்மார்க்கில் 2012இலும் இம்முறை 2018 இல் ஐஸ்லாந்திலும் முஸ்லிம்கள்  21மணி நேர நோன்பை கடைப்பிடித்தனர். உலகிலேயே அதிக மணிநேரம் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம் கள் ஆவர்.

அதேவேளையில் அர்ஜெண்டினாவில் வாழும் முஸ்லிம்கள் 9 மணிநேரமே நோன்பை நோற்கின்றார்கள். லத்தீன் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால் இவர்களுக்கு உலகிலேயே குறைந்த அளவே நோன்பு நோற்றால் போதும். ஏனெனில் இங்கு பகல் குறைந்த நேரம் ஆகும்.
அதேவேளையில் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் சூழல் ஆச்சரியமானது. அங்கு 24 மணிநேரம் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும்,நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயே நடக்கிறது. அங்கு 20 மணிநேரம் நோன்பு நோற்கவேண்டும் என அறிஞர்கள் பத்வா வழங்கியுள்ளனர். சில காலங்களில் இரவு அதிகமாக வரும். அக்காலங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அம்மக்கள் கூறுகின்றனர்.


உலகநாடுகளில் நோன்பு இருக்கவேண்டிய நேரங்கள்..
*துருக்கி- 17.5மணித்தியாலம்
*சிரியா-16மணித்தியாலம்
*லெபனான்-16மணித்தியாலம்
*பலஸ்தீன்-15மணித்தியாலம்
*ஈராக்-15மணித்தியாலம்
*பஹ்ரைன்-15மணித்தியாலம்
*குவைட்-15மணித்தியாலம்
*கட்டார்-15மணித்தியாலம்
*சவூதிஅரேபியா-15மணித்தியாலம்
*ஐக்கிய அரபு இராச்சியம்-15மணித்தியாலம்
*மொரோக்கோ-16மணித்தியாலம்
*டியூனிசியா-16மணித்தியாலம்
*அல்ஜீரியா-16மணித்தியாலம்
*லிபியா-16மணித்தியாலம்
*எகிப்து-16மணித்தியாலம்
*இத்தாலி-17மணித்தியாலம்
*கிரேக்கம்-17மணித்தியாலம்
*ஸ்பைன்-17மணித்தியாலம்
*போர்த்துக்கல்-17மணித்தியாலம்
*பிரான்ஸ்-17மணித்தியாலம்
*சுவீடன்-20மணித்தியாலம்
*டென்மார்க்-20மணித்தியாலம்
*லக்ஸம்பேர்க்-17.5மணித்தியாலம்
*ரஷ்யா-20மணித்தியாலம்
*உக்ரைன்-17மணித்தியாலம்
*கொஸ்கஸ்-17மணித்தியாலம்
*ஒல்லாந்து-17மணித்தியாலம்
*பெல்ஜியம்-17மணித்தியாலம்
*சுவிஸர்லாந்து-17.5மணித்தியாலம்
*அவுஸ்ரியா-17.5மணித்தியாலம்
*பிரேசில்-9.5மணித்தியாலம்
*ஆர்ஜன்டீனா-9மணித்தியாலம்
*தென்ஆபிரிக்கா-10மணித்தியாலம்
*மேற்கு ஆபிரிக்கா-13.5மணித்தியாலம்
*ஐஸ்லாந்து-21மணித்தியாலம்
*ஜெர்மன்-20மணித்தியாலம்
*போலாந்து-20மணித்தியாலம்
*பிரித்தானியா-20.5மணித்தியாலம்
*நோர்வே-20மணித்தியாலம்
*பின்லாந்து-20மணித்தியாலம்
*அவுஸ்ரேலியா-9.5மணித்தியாலம்
*கனடா-19மணித்தியாலம்
*ஐக்கியா அமெரிக்கா-20மணித்தியாலம்
*நியூஸிலாந்து-9.5மணித்தியாலம்
*இந்தோனேசியா-12மணித்தியாலம்
*மலேசியா-12மணித்தியாலம்
*இலங்கை-14மணித்தியாலம்
*இந்தியா -14மணித்தியாலம்
*ஆப்கானிஸ்தான்-17மணித்தியாலம்
*பாகிஸ்தான்-15.5மணித்தியாலம்
*ஈரான்-17மணித்தியாலம்
*மாலைத்தீவு-13.5மணித்தியாலம்
*பங்களாதேஷ்-15மணித்தியாலம்
*யெமன்-12.5மணித்தியாலம்
*சீனா-14மணித்தியாலம்
*ஜப்பான்-17மணித்தியாலம்
*தென்கொரியா-16.5மணித்தியாலம்
*சிங்கப்பூர் -14மணித்தியாலம்
*பிலிப்பைன்ஸ்-14மணித்தியாலம்
*புரூனை-13மணித்தியாலம்
*தாய்லாந்து-14மணித்தியாலம்

குறிப்பு: ஒன்றுக்கு மேற்பட்ட நேரவலயங்களைக் கொண்ட நாடுகளின் வெவ்வேறு பகுதிகளில் நோன்பு இருக்க வேண்டிய நேரங்கள் வேறுபடும்

No comments: