எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.............!!
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் தினகரன் என்ற சகோதரர் வசித்து வருகிறார், இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிகிறார், இவர் இன்டர்நெட் உபயோகிக்கும் பழக்கம் உடையவர்.
இன்னிலையில் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் தற்கொலை செய்து கொண்டதாக சாதிக் பாஷா அவர்களின் செய்தி பத்திரிக்கையில் வந்ததை பார்த்து தனது முகநூல் (facebook) நண்பரான சவூதி அரேபியா ரியாத்தில் பணி புரிந்துவரும் கடலூர் மாவட்டம் ஆயங்குடியை சேர்ந்த சகோ.சபியுல்லாஹ் (Abu Usama ) என்பவரிடம்
தற்கொலை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா ? என்ற முதல் கேள்வியை வைக்கின்றார்?
அதற்கு பதில் கூறி மேலும் இஸ்லாத்தை பற்றி கூறி உள்ளார் சகோ.சபியுல்லாஹ்...
அதன் பின் பல்வேறு நாட்களில் இஸ்லாத்தை பற்றிய சகோதரர் தினகரனின் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை தொடர்ந்து முகநூல் மூலமே தஃவா செய்து கொண்டிருந்தார் சகோ.சபியுல்லாஹ்...
இந்நிலையில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் கடலூர் நகர செயலாளர் சகோ.ஷாநவாஸ் அவர்களுக்கு போன் செய்து தினகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதாக கூறி இருக்கின்றார் உங்களை நேரில் பார்க்க சொல்லி இருக்கிறேன் என கூறினார்.
அதன் பின் சகோ.தினகரன் அவர்களும் நேரில் வந்தார், வந்தவர் நான் தற்போது இருக்கும் மதத்தில் மிகுந்த கடவுள் பக்தி உடையவனாக இருந்தேன். ஆனால் இறை திருப்தியை என்னால் அங்கே உணர முடியவில்லை. ஒரு வருட காலமாகவே மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு முடிவு கட்டி இன்று இஸ்லாத்தை ஏற்க வந்துள்ளேன் என கூறினார்.
அவருக்கு இஸ்லாம் சம்பந்தமாக TNTJ நிர்வாகிகள் மூலம் மேலும் தஃவா செய்யப்பட்டது. அதன்பின் அவர் அணிந்திருந்த தாயத்து மற்றும் மத சம்பந்தப்பட்ட மோதிரம் ஆகியவைகள் அவரிடமிருந்து அவரின் முழு விருப்பத்தோடு அகற்றப்பட்டது.
அதன் பின் நேற்று 11.12. 2012 அன்று TNTJ நிர்வாகிகள் முன்னிலையில் அந்த சகோதரர் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும்
அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்கள் தான் என்றும் உளபூர்வமாக ஏற்றுகொள்வதாக கூறி சத்திய இஸ்லாத்தை ஏற்று கொண்டு அப்துல்லாஹ் என்றும் தனது பெயரை மாற்றம் செய்துக்கொண்டார்,
Facebook - முகநூல் மூலம் பல்வேறு தீமைகள் நடந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் அதே முகநூலை சத்திய இஸ்லாத்திற்கான பிரச்சாரகளமாகஆக்கி செயல்பட்டால் நிறைய நன்மைகள் அடையலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
(இவருக்கு தஃவா செய்த சகோதரர் சபியுல்லாஹ் அவர்களின் சொந்த இடத்தில்தான் ஆயங்குடி TNTJ மர்கஸ் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது)
புகைப்படம் மற்றும் செய்தி: D.முத்துராஜா (கடலூர் மாவட்ட TNTJ தலைவர்)
No comments:
Post a Comment