Sunday, 20 April 2014

எப்படி முதன் முதலில் இஸ்லாம் இந்தியாவுக்குள் நுழைந்தது இதோ உண்மை வரலாறு!!

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? எப்படி முதன் முதலில் இஸ்லாம் இந்தியாவுக்குள் நுழைந்தது இதோ உண்மை வரலாறு!! சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.
பின் இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பும் பொருட்டு மாலிக் பின் தீனார் என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார்.
இவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.


No comments: